இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. முதல் நாள் ஆட்ட முடிவில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 176* ரன்கள் எடுத்து இருந்த நிலையில் இன்று 2-நாள் ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து வரலாறு படைத்தார்.
கடந்த ஆண்டு இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் அறிமுகமாகி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 411 ரன்கள் எடுத்து இருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டி கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஜெய்ஸ்வால் தனது சதத்தை தவறவிட்டார். முதல் போட்டிகள் முதல் இன்னிங்சில் 80 ரன்கள் எடுத்திருந்தார். இதைதொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
தற்போது இரண்டாவது போட்டியில் முதலில் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். ஜெய்ஸ்வால் 277 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். இதன் போது அவர் 18 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசினார். அவர் 275 பந்துகளில் 191 ரன்கள் எடுத்து இருந்தபோது அடுத்தடுத்து சிக்ஸர் , பவுண்டரி விளாசி 201 ரன்கள் குவித்து இரட்டை சதம் அடித்தார். இருப்பினும் அடுத்த சில நிமிடங்களில் 209 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
முதல் நாள் முடிவில் 336 ரன்கள் குவித்த இந்திய அணி..!
மூன்றாவது இந்திய பேட்ஸ்மேன்:
இந்தியாவுக்காக, சுனில் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் 21 வயதில் இரட்டை சதம் அடித்தார். அதேசமயம் கவாஸ்கரை விட வினோத் காம்ப்ளி குறைந்த வயத்தில் இரட்டை சதம் அடித்தார். 21 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக இரட்டை சதம் அடித்துள்ளார்.
தற்போது ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து 22 வயத்தில் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்தியாவுக்காக இரட்டை சதம் அடித்த மூன்றாவது இளம் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 4-வது இரட்டை சதம்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்காக இரட்டை சதம் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு முன், மயங்க் அகர்வால், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இரட்டை சதம் அடித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மேன் இரட்டை சதம் அடிப்பது இதுவே முதல் முறை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காக இரட்டை சதம் அடித்த பேட்ஸ்மேன்கள்
215 – மயங்க் அகர்வால்
254* – விராட் கோலி
212 ரோஹித் சர்மா
243 மயங்க் அகர்வால்
209 யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…