இங்கிலாந்து இந்தியா இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 445 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பின்னர் 126 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைதொடங்கிய இந்திய அணி 430 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் ரோஹித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர்.
கெவின் பீட்டர்சன் சாதனையை முறியடித்த பென் டக்கெட் ..!
மீண்டும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார். தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். கடந்த டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த நிலையில் மீண்டும் ஒருமுறை இரட்டை சதம் அடித்துள்ளார்.
231 பந்துகளில் 14 பவுண்டரி , 10 சிக்ஸர் உடன் தனது இரண்டாவது இரட்டை சதத்தை ஜெய்ஸ்வால் கடந்தார். ஏழு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் இதுவரை மூன்று சதம், இரண்டு இரட்டை சதம் அடித்துள்ளார்.
இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த வீரர்கள்:
203*MAK பட்டோடி எதிராக இங்கிலாந்து டெல்லி 1964
200*D சர்தேசாய் vs WI மும்பை BS 1965
220 எஸ் கவாஸ்கர் vs WI போர்ட் ஆஃப் ஸ்பெயின் 1971
221 எஸ் கவாஸ்கர் vs எங் தி ஓவல் 1979
281 VVS லக்ஷ்மன் vs அவுஸ் கொல்கத்தா 2001
212 வாசிம் ஜாஃபர் vs WI செயின்ட் ஜான்ஸ் 2006
214*யஷஸ்வி ஜெய்ஸ்வால் எதிராக இங்கிலாந்து ராஜ்கோட் 2024
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…