சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடைசியாக முடிந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதில் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் விளையாடுகையில் , தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். அப்போது முதல் ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன்னிற்கு அழைக்க அப்போது ஜெய்ஸ்வால் அதனை மறுத்து இருப்பார் . அதனால் ஒரு பந்தை கூட சந்திக்காமல் ருதுராஜ் ரன்அவுட் செய்யப்பட்டு வெளியேறி இருப்பார்.
ஐபிஎல் அதிரடிகள்.! மும்பை சென்ற ஹர்திக் பாண்டியா..! கேப்டனாக மாறிய சுப்மன் கில்.!
இதனை தொடர்ந்து நேற்று இரண்டாவது டி20 ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அப்போது இதே ஜோடி மீண்டும் களமிறங்கியது. இதில் ஜெய்ஸ்வால் ஒரு பக்கம் அதிரடி காட்டி ஆடி 25 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார். ருதுராஜ் இறுதி வரை நிதானமாக விளையாடி 43 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து இருந்தார். இந்திய அணி வெற்றி பெற்றது. ருதுராஜ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ஸ்வால் முந்தைய போட்டியில் நிகழ்ந்த ரன் அவுட் பற்றி பேசினார். அப்போது, முந்தைய டி20 போட்டியில் நடந்த ரன் அவுட் என்னுடைய தவறு தான். அதற்காக நான் அப்போதே அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன். அவர் என்னை ரன் ஓட அழைத்தார். நான் தான் மறுத்துவிட்டேன். ஆனால் அதனை ருது பாய் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை . விளையாட்டில் இது போல நடக்கும் சகஜம் தான் என கூறினார். ருது பாய் மிகவும் அன்பானவர் அக்கறையுள்ளவர் என கூறினார்.
மேலும், கேப்டன் சூர்யா பாயும், பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மணனும் என்னை சுதந்திரமாக என்னுடைய விளையாட்டை விளையாட கூறினர். அதனால் நான் இன்று சுதந்திரமாக விளையாடினேன் என நேற்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் கூறினார்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…