போட்டியின்றி ஐசிசி தலைவரானார் ‘ஜெய்ஷா’! இனி பாகிஸ்தானுக்கு ‘ஆப்பு’ தான்!
சென்னை : ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வாகி உள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இனி போதாத காலமாக அமையும் எனக் கருதப்படுகிறது.
புதிய ஐசிசி தலைவர் “ஜெய்ஷா” ..!
சர்வேதச கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர்-30 ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இதனால், அடுத்த தலைவருக்கான தேடுதலில் ஐசிசி இருந்த நிலையில் பிசிசிஐ தலைவராக இருந்த ‘ஜெய்ஷா’ தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஐசிசி தலைவருக்காக விண்ணப்பிக்கும் கடைசி தேதியும் நேற்றுடன் முடிவடைந்தது.
அதில் எந்த வித போட்டியிமின்றி ‘ஜெய்ஷா’ ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குஜராத் கிரிக்கெட் அசோசியேசனில் ஜெய்ஷாவின் பயணம் தொடங்கியது. அதன் பிறகு பிசிசிஐ செயலாளராக பணியாற்றிய ஜெய்ஷா தற்போது ‘சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர்’ என்ற பதவிக்குச் சென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜக் மோகன் டால்மியா, சரத்பவார் , N.சீனிவாசன் , ஷஷாங்க் மனோகர் இவர்களைத் தொடர்ந்து 5-வது இந்தியராக ஐசிசி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிலும், இளம் வயதிலே ஐசிசியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையையும் ஜெய்ஷா பெற்றுள்ளார். அதனால் இந்த ஆண்டில் வரும் டிசம்பர் மாதம் முதல் ஜெய்ஷா ஐசிசி தலைவராக பணியாற்றத் தொடங்குவார் எனக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானும் .. பிசிசிஐயும் ..!
ஜெய்ஷா ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு இனி கிரிக்கெட்டின் தரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவிடும் எனப் பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதே நேரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இனி வரும் காலம் மோசமாக இருக்கலாம் எனக் கூறுகிறார்கள். அதற்குக் காரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும், பிசிசிஐக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது.
பாகிஸ்தானில் ஒரு ஐசிசி கிரிக்கெட் தொடர் நடந்தால் இந்தியா அங்குச் செல்லமாட்டோம் எனவும் இந்தியாவில் ஐசிசி கிரிக்கெட் தொடர் நடந்தால் பாகிஸ்தான் அங்குச் செல்லமாட்டோம் எனவும் மாறிமாறி கூறி வருகிறார்கள். அடுத்த 2025-ம் ஆண்டில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரானது பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதில் இந்தியா தாங்கள் பாகிஸ்தானுக்கு வரமாட்டோம் எனவும் வேறு நாட்டில் தங்களுக்கான போட்டிகளை நடத்த வேண்டும் எனவும் சமீபத்தில் கூறி வந்தது.
இதற்குப் பாகிஸ்தான் அப்போது ஒப்புதல் வழங்கவில்லை. இதற்கும் மேலாக ஐபிஎல் போட்டிகளை இந்தியா நடத்தும் அதே நேரத்தில் பாகிஸ்தானும் பிரிமீயர் லீக்கை நடத்துவார்கள். இது பிசிசிஐக்கும், ஜெய்சாவுக்கும் சற்று கடுப்பாகவே இருந்து வந்தது. இந்நிலையில், ஜெய்ஷா ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்று இருக்கிறார். இதனால், பாகிஸ்தானில் ஐசிசி தொடர்களை நடத்துவதைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்வைத்தால், அதனை ஜெய்ஷா பல்வேறு காரணங்கள் கூறி நிராகரிக்கலாம் எனக் கூறுகிறார்கள்.
சர்வ்தேச கிரிக்கெட்டில் இனி முடிவு எடுக்கும் உரிமை ஜெய்ஷாவிடம் இருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மறைமுக இடையூறுகள் ஏற்படலாம் எனவும் கருத்துக்கள் எழுந்துள்ளது. இப்படி இருக்கையில் ஒரு தரப்பினர் ஜெய்ஷா ஐசிசி தலைவர் பொறுப்பிற்கு வந்தால் பிசிசிஐயில் ஏற்பட்ட மாற்றங்களைப் போலப் பல நல்ல மாற்றங்கள் வரக்கூடும் எனக் கூறிவருகின்றனர்.