ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்பொழுது இரண்டாம் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அடுத்த களமிறங்கிய இந்திய அணி, 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 91.3 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 277 ரன்கள் எடுத்துள்ளது. அப்பொழுது மழை குறுக்கிட்டதால், 2 ஆம் நாள் ஆட்டம் சீக்கிரமாக முடிந்தது. அதனைதொடர்ந்து, இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் கேப்டன் ரஹானே – ஜடேஜா கூட்டணி சிறப்பாக ஆடிவந்தது. ஜடேஜா ஒரு பந்தை ஷார்ட் கவரில் தட்டினார். மறுபுறத்தில் இருந்த ரஹானேவை சிங்கிள் ஓட அழைத்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக 112 ரன்கள் அடித்து ரஹனே ரன் அவுட் ஆகினார்.
இதனால் ஜடேஜா, ரஹானேவை பார்த்து தலைகுனிந்து நின்றார். அப்பொழுது ரஹானே, ஜடேஜாவிடம் கோபப்படாமல், சிரித்தபடி அவரை ஊக்கப்படுத்தி, விளைடுமாறு கூறினார். ரஹானேவின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானேவின் தவறினால் விராட் கோலி ரன் அவுட் ஆனார். அப்போது கோலி கோபமடைந்து, மைதானத்தை விட்டு வெளியேறினார். ஆனால் ரஹானே ஜடேஜாவிடம் சற்றும் கோபப்படாமல் அவரை ஊக்கப்படுத்தி, விளையாட்டில் கவனம் செலுத்தி விளைடுமாறு கூறியது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…