இவர் இல்லையென்றால் இந்தியாவுக்கு பலத்த அடியாக இருக்கும்- மஹேல ஜயவர்தனா
ரவீந்திர ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்று இலங்கையின் முன்னாள் கேப்டன் மஹேல ஜயவர்தனா கூறியுள்ளார்.
அக்டோபர் 16 இல் , தொடங்கவிருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிக்காக இந்திய அணியில், ஆசியக்கோப்பை தொடரின் போது காயமடைந்த ஜடேஜா, இடம்பெற வில்லை.
இது குறித்து ஜயவர்தனா மேலும் கூறியதாவது, ஆசியக்கோப்பை தொடரின் பாதியில் இந்திய அணி ஜடேஜாவை இழந்தது இந்தியாவின் போக்கையே மாற்றியது. குரூப் ஸ்டேஜ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஜடேஜாவின் ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது, அதன் பிறகு ஏற்பட்ட அவரின் காயம், இந்திய அணிக்கு மிகுந்த பின்னடைவைத் தந்தது என்றும் ஜயவர்தனா கூறியுள்ளார்.
ஜடேஜா, ஒரு நல்ல பேட்ஸ்மேன், பந்து வீச்சிலும் குறைவான ரன்களை விட்டுக்கொடுப்பார் மற்றும் பீல்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருபவர். 5ஆவது வீரராக களமிறங்கி ஹர்டிக் பாண்டியாவுடன் இணைந்து கடைசி கட்டத்தில் இந்திய அணிக்கு தேவையான ரன்களை அடித்து வந்தார்.
தற்போது இடது கை வீரரான ஜடேஜாவின் இழப்பை ஈடுகட்ட ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் க்கு பதிலாக ஆடுகிறார். இதனால் தினேஷ் கார்த்திக் ஆடும் வாய்ப்பை இழக்கிறார். இது இந்திய அணிக்கு சற்று பேரிழப்பு என்றே கூறியுள்ளார், மஹேல ஜயவர்தனா.
ஆசியக் கோப்பை போட்டியிலிருந்து பார்க்கும் போது விராட் கோலியின் பார்ம் இந்திய அணிக்கு, கூடுதல் பலமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஆசியக் கோப்பையில் விராட் கோலியின் தான் யார் என்பதை நிரூபித்து விட்டார் என்றும், டி-20 உலகக்கோப்பையிலும் அவரது சிறப்பான ஆட்டம் தொடரும் என்றும் ஜயவர்தனா கூறியுள்ளார்.