விண்ணை பிளக்கும் இந்திய பேட்டிங் விமர்சனம் ..! அத பத்தி கவலைபட வேண்டாம் சீறும் ஜடேஜா..!
2019 உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் 30 தேதி துவங்குகிறது. இதில் பங்கேற்க 10 அணிகள் இங்கிலாந்து சென்றுள்ளது.தற்போது அணிகளுக்கு எல்லாம் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தியா தனது உலககோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.ஆனால் இந்தியா அந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.இதில் இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பல் தான் தோல்விக்கு காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் கடுமையாக எழுந்தது.
இதற்கு காரணம் 50 ரன்னில் 4 விக்கெட் 115 ரன்னிற்குள் 9 விக்கெட் என்று பேட்ஸ்மேன்கள் நிலையாக நின்று ஆடவில்லை அதன் பின்னர் ஜடேஜா – குல்தீப் ஜோடி சற்று நின்று ஆடியதனால் 179 ரன் எடுத்து 39.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனிடையே இது குறித்து கேப்டன் கோலி தெரிவிக்கையில் முன் பேட்ஸ்மேன்கள் ஆடாத போது பின் பேட்ஸ்பேன்கள் ஆடுவது அவசியம் என்றார்.இருந்தாலும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது .
இந்நிலையில் களத்தில் நின்று விளையாடிய இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா இந்த விமர்சனத்திற்கு பதிலளித்து உள்ளார்.
ஒரு மோசமான ஆட்டத்தை வைத்து நமது வீரர்களின் திறமையை எடை போடக் கூடாது.இது ஒரு மோசமான ஆட்டமாக தான் அமைந்தது அதில் எதிர் கருத்து இல்லை.ஆனால் தவறுகளை திருத்தி கொள்ள நமக்கு கால அவகாசம் உள்ளது.பேட்டிங் திறமையை மேம்படுத்த கடுமையாக உழைப்போம்.இங்கு உள்ள நமது வீரர்களுக்கு எல்லாம் நல்ல அனுபவம் உள்ளது.
ஆடுகளம் தொடக்கத்தில் நன்றாக தான் இருந்தது.ஆனால் உலககோப்பை தொடரில் இது போன்ற அதிக புற்கள் கொண்ட ஆடுகளமாக இருக்காது என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.