ஜடேஜா, தனது இணையதள பக்கத்தில் சென்னை அணி சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கியுள்ளாராம். மேலும், இந்த வருடம் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து ஜடேஜா சொல்லவில்லை.
ஐ.பி.எல் அணிகளில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அணிகளில் மிக முக்கிய அணியாக கருதப்படுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த அணியில் ஒருமுறை ஒரு வீரர் இருந்தாலே அவர் கூட எனக்கு பிடித்த அணி என்றால் சி.எஸ்.கே என கூறிவிடுவார்.
அந்த அணியில் மிக முக்கிய வீரர்களான தோனி, பிராவோ, ஜடேஜா, ராய்டு ஆகியோர் நீண்ட வருடங்களாக சென்னை அணியில் இடம் பெற்று நிரந்தர சென்னை வீரர்களாக இருக்கின்றனர்.
தோனி வயது மூப்பு காரணமாக தனது கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் கொடுத்தார். ஆனால் சீசன் பாதியிலேயே அந்த கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனிக்கு கொடுத்து விலகிவிட்டார் ஜடேஜா. மேலும், ஜடேஜா காயம் காரணமாக கடந்த சீசனில் பாதியில் விளையாடாமல் விலகிவிட்டார்.
தற்போது இணையத்தில் தீயாய் ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது, ஜடேஜா, தனது இணையதள பக்கத்தில் 2021- 2022 இடைப்பட்ட காலத்தில் சென்னை அணி சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கியுள்ளாராம். மேலும், வருடம் தவறாமல் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் ஜடேஜா, இந்த வருடம் மிஸ்ஸிங். இதனையெல்லாம் கணக்கில் கொண்டு, இணையவாசிகள் , அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக ஜடேஜா விளையாட மாட்டார் என கொளுத்தி போட்டு வருகின்றனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…