இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா, ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடலுடன் இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் அணி 214 ரன்கள் எடுத்தது.
மழை காரணமாக போட்டி தாமதமானதால் சென்னை அணிக்கு டிஎல்எஸ் முறைபடி, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. விறுவிறுப்பாக நந்தா இந்தப்போட்டியில் கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்தார். இதன் மூலம் சென்னை அணி 5 வது முறை சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரது புகைப்படத்துடன் வானத்தை போல திரைப்படத்திலிருந்து “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” என்ற பாடலை வைத்துள்ளார். மேலும், ஜடேஜா ஜூன் 7ம் தேதி நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…