‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடலுடன் இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்த ஜடேஜா..!

RavindraJadejaStory

இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா, ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடலுடன் இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் அணி 214 ரன்கள் எடுத்தது.

மழை காரணமாக போட்டி தாமதமானதால் சென்னை அணிக்கு டிஎல்எஸ் முறைபடி, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. விறுவிறுப்பாக நந்தா இந்தப்போட்டியில் கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரவீந்திர ஜடேஜா  ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்தார். இதன் மூலம் சென்னை அணி 5 வது முறை சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரது புகைப்படத்துடன் வானத்தை போல திரைப்படத்திலிருந்து “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” என்ற பாடலை வைத்துள்ளார். மேலும், ஜடேஜா ஜூன் 7ம் தேதி நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்