மினி ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களது தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்கள் விவரத்தை வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 16 ஆவது சீசன் ஐபிஎல் முன்னிட்டு மினி ஐபிஎல் ஏலம் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்களது தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் விவரத்தை பிசிசிஐ க்கு நவ-15க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதனையடுத்து சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களது தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் விவரத்தை அளித்துள்ளதாக ஜீ 24 டாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரவீந்திர ஜடேஜாவுக்கும், சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கும் இடையில் சலசலப்பு இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் சிஎஸ்கே அணி, ஜடேஜாவை தக்கவைத்துள்ளது, மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியில் 2010இலிருந்து விளையாடிவரும் கீரன் பொல்லார்ட் ஐ அந்த அணி விடுவித்துள்ளது.
சிஎஸ்கே அணி, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, சிவம் துபே, ரிதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, முகேஷ் சவுத்ரி, டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் தீபக் சாஹர் ஆகிய 9பேரை தக்கவைத்துள்ளது, மற்றும் கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, நாராயண் ஜகதீஷன் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகிய 4பேரை விடுவித்துள்ளது.
இதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் ஷர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டேனியல் சாம்ஸ், டிம் டேவிட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜஸ்பிரித் பும்ரா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் திலக் வர்மா ஆகிய 10பேரை தக்கவைத்துள்ளது மற்றும் ஃபேபியன் ஆலன், கீரன் பொல்லார்ட், டைமல் மில்ஸ், மயங்க் மார்கண்டே மற்றும் ஹிருத்திக் ஷௌகின் ஆகிய 5பேரை விடுவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…