சீக்கிரம் ரூமுக்கு வா.. மனைவிக்கு ‘செல்ல’ உத்தரவு போட்ட ஜடேஜா.!

Jadeja - Rivaba Jadeja

Jadeja : தனது மனைவியின் இன்ஸ்டா போஸ்டுக்கு ஜடேஜா ஜாலியாக பதில் அளித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வீரராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா, தனது அதிரடியான விளையாட்டுதிறன் மூலம் ரசிகர்களை கவர்வது போல, அவ்வப்போது தனது சிறு சிறு சேட்டைகள் மூலம் இன்னும் அதிகமான ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

இவரது மனைவி ரிவாபா ஜடேஜா பதிவிட்ட போஸ்டுக்கு ஜடேஜா அளித்த அசத்தல் ரீப்ளே தற்போது வைரல் பதிவாக மாறியுள்ளது. ரிவாபா ஜடேஜா Hukum (கட்டளை) எனும் வார்த்தை உள்ள டி ஷார்ட் அணிந்து பின்னடி, ஜடேஜா புகைப்படம் இருக்கும்படியான புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

Jadeja - Reveba Jadeja Instagram Post

இதற்கு பதில் அளித்த ரவீந்திர ஜடேஜா, அந்த பதிவிற்கு கிழே, ” சரி கட்டளையிடுகிறேன். சீக்கிரம் நமது அறைக்கு வந்துவிடு” என பொருள்படும்படி ஹிந்தியில் பதில் அளித்து இருந்தார். ரிவாபா பதிவும், அதற்கு ஜடேஜா ஜாலியாக அளித்த பதிலும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

பாஜகவை சேர்ந்த ரிவாபா ஜடேஜா, தற்போது குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி இந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய 2 போட்டிகளிலும் அசத்தல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
bcci
mysskin - Aruldoss
seeman ponmudi
RN Ravi - Congress
ADMK - EPS
magizh thirumeni