நான்கு பந்தில் போட்டியை மாற்றிய ஜடேஜா..!

Published by
murugan

நேற்றைய போட்டியில் ஜடேஜா 19-வது ஓவரில் 22 ரன்களை ஜடேஜா எடுத்து அணியை வெற்றி பெறச்செய்தார்.

ஐபிஎல் தொடரில் நேற்று 2 போட்டிகள் நடைபெற்றது. அதில் முதல் போட்டியில்  சென்னை, கொல்கத்தா அணிகள் மோதியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக திரிபாதி 45 ரன்களும், நிதிஷ் ராணா 37 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  தொடக்க வீரர்கள் ருதுராஜ் , டு பிளசிஸ் வழக்கம் போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 28 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.  அடுத்த சில நிமிடங்களில் டு பிளசிஸ் 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த போது பிரசித் ஓவரில் விக்கெட்டை இழந்தார். இதனால், சென்னை முதல் விக்கெட்டை இழக்கும்போது 74 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர், மொயீன் அலி 32 ரன்களிலும், அம்பதி ராயுடு 10 ரன்னிலும் வெளியேற சுரேஷ் ரெய்னா, தோனி களத்தில் நின்றதால் சென்னை ரசிகர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை இருந்தது. ஆனால், வருண் சக்கரவர்த்தி ஓவரில் சின்ன தல ரெய்னா, தல தோனி இருவரும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், கொல்கத்தா அணிக்கு வெற்றி என்ற நிலை இருந்து. அப்போது, சென்னைக்கு 12 பந்துகளில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில், 19-வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசனார்.

முதல் இரு பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த 2 பந்தில் 2 சிக்ஸரை ஜடேஜா  பறக்கவிட சென்னை ரசிகர்களுக்கு அப்போதுதான் மீண்டும் நம்பிக்கை வந்தது. அந்த நம்பிக்கையை சற்றும் குறைக்காமல் கடைசி இரு பந்தில் 2 பவுண்டரிகளை தெறிக்கவிட்டு அந்த ஓவரில் மட்டும் 22 ரன்களை ஜடேஜா எடுத்தார்.

கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட சுனில் நரைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய  நிலையில், ஷர்துல் தாக்கூர் 3 ரன்கள் எடுக்க கடைசி பந்தில் தீபக் சாஹர் சிங்கிள் அடித்து அணியை வெற்றிப் பெற செய்தார்.  இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு சென்றது.

 

 

Published by
murugan

Recent Posts

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

32 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

45 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

1 hour ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

1 hour ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

2 hours ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

2 hours ago