நேற்றைய போட்டியில் 4 கேட்ச்களை பிடித்த ஜடேஜா, தனது கைகளால் 4 என்று செய்கை காட்டி, “ஹலோ, துபாய் ஆ” என்பதை போல புதிய ஸ்டைலில் ஆக்ஷன் செய்தார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தனர். 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 143 ரன்கள் எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாம் வெற்றியை பதிவு செய்தது, சென்னை அணி.
இந்த போட்டியில் சென்னை அணியின் ஜடேஜா, 2 விக்கெட்களை வீழ்த்தியது மட்டுமல்லாமல், 4 கேட்ச்களையும் பிடித்து அசத்தினார். அவர் ராஜஸ்தான் அணி வீரர்களான மனன் வோரா, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ஜெயதேவ் உனட்கட் ஆகியோர்களின் கேட்ச்களை பிடித்து அசத்தினார். இதில் சுவாரசியம் என்னவென்றால், ரியான் பராக் அடித்த பந்தை கேட்சை பிடித்த ஜடேஜா, பந்தை எல்லைக்கோட்டில் வைப்பது போல் பாவளை செய்தார்.
மேலும், கடைசியாக உனட்கட் கேட்சை பிடித்த ஜடேஜா, தனது கைகளால் 4 என்று செய்கை காட்டி, “ஹலோ, துபாய் ஆ” என்பதை போல புதிய ஸ்டைலில் ஆக்ஷன் செய்தார். இதுதொடர்பான விடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகு வருகின்றது. அதுமட்டுமின்றி, இந்த சீஸனின் மைதானத்தில் எங்குபார்த்தாலும் ஜடேஜா நிற்கிறார். அவரின் கைகளை விட்டு பந்து எங்கும் செல்லவில்லை.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…