முதல் இந்திய வீரர் என்ற 35 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜடேஜா..!
மொஹாலி டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி அசத்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா 2 சதம் விளாசியுள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சதம் அடித்து அசத்தினார்.
இந்த போட்டியில் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அரிய சாதனையை படைத்தார். ஏழாவது இடத்தில் அதிக ரன்கள் எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார். இதற்கு முன், கபில்தேவ் 1986ல் இலங்கைக்கு எதிராக 7வது இடத்தில் பேட் செய்து 163 ரன்கள் எடுத்தார் அதுவே இதுவரை சாதனையாக இருந்தது.
இது தவிர, ஜடேஜா தனது சர்வதேச கிரிக்கெட்டில் 5000 ரன்களையும் கடந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 5000 ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார். ஜடேஜா கபில்தேவின் சாதனையை முறியடித்தார். இந்த பட்டியலில் பண்ட் 159 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்தியா அணி முதல் இன்னிங்சில் 572 ரன்கள் குவித்தது.