ஐபிஎல் 2022 க்கான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி ஒப்படைத்துள்ளார்.
ஐபிஎல்:சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் எம்எஸ்.தோனி க்கு பதிலாக புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஐபிஎல் தொடங்கியது முதல் கேப்டனாக இருந்து வரும் தோனி தனது கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒப்படைத்துள்ளார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
எம்எஸ் தோனி தனக்கான தனி வரலாற்றுக்கு சொந்தக்காரர், அவர் யாராலும் அடைய முடியாத நம்பமுடியாத கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளார். சிஎஸ்கே கேப்டனாக 12 சீசன்கள், 9 இறுதிப் போட்டிகள் மற்றும் 4 கோப்பைகளை வென்றுள்ளார்.
2008ல் லீக் தொடங்கியதில் இருந்து சிஎஸ்கே கேப்டனாக இருந்த தோனி, நடக்கவிருக்கும் சீசன் தனது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கலாம் அதற்கான முடிவாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.தோனி ஏற்கனவே அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
“கடந்த சில ஆண்டுகளாக ரவீந்திர ஜடேஜா ஒரு சிறந்த அனுபவாய்ந்த வீரராகவும் முதிர்ச்சியடைந்த விதம்,இக்கட்டான சூழ்நிலையில் ஆட்டத்தை மாற்றி அமைக்கும் விதம் சிறந்தவராக பார்க்கப்படுகிறார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…