ஜடேஜா ..நீங்களுமா? டி20யிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஜடேஜா!!
ஜடேஜா: இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நேற்று டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் சில நேர இடைவேளைகளில் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் இடது கை சுழற் பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான ரவீந்திர ஜடேஜா தற்போது சர்வேதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜடேஜா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “அனைவருக்கும் நன்றி நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். ஒரு வலிமை நிறைந்த குதிரை பெருமையுடன் துள்ளிக் குதிப்பதை போல, நான் எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததை செய்து கொண்டே இருப்பேன்.
கண்டிப்பாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். டி20 உலகக் கோப்பையை வெல்வது ஒரு கனவு. அது நனவாகிவிட்டது. இது எனது டி20 சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு உச்சம்.
என்னுடைய இந்த நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், உங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி. ஜெய்ஹிந்த் ! ” என பதிவிட்டிருந்தார். மேலும், அவரது பதிவிற்கு கீழ் அவரது ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram