நேற்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
நியூஸிலாந்து அணி நேற்று 46.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் இருந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் இன்று போட்டி தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 239 ரன்கள் எடுத்தது.
240 ரன்களுடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ,கே.எல் ராகுல் இருவரும் களமிங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய ரோஹித் 4 பந்தில் 1 ரன் எடுத்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி 6 பந்தில் 1 ரன்னுடன் வெளியேறினர். அடுத்ததாக கே.எல் ராகுலும் 1 ரன்னுடன் வெளியேற 3 விக்கெட்டை இழந்து 5 ரன்கள் எடுத்து இந்திய அணி திணறி வந்தது.
அப்போது தினேஷ் கார்த்திக் , ரிஷாப் பண்ட் இருவரும் களமிறங்க நிதானமாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் 6 ரன்னில் அவுட் ஆனார்.பின்னர் இறங்கிய ஹர்திக் , ரிஷாப் பண்ட் இருவரின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.
சிறப்பாக விளையாடி வந்த ரிஷாப் பண்ட் 32 ரன்னில் வெளியேறினார். இறுதியாக தோனி , ஜடேஜா இவர்கள் கூட்டணியில் இணைய ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
இவர்கள் இருவரின் கூட்டணியில் சத்தத்தை எட்டியது. இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 221 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…