2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இதன் பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடைபெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் களமிறங்கினர்.
மார்கஸ் ஸ்டோணிஸ் 37(53 பந்துகள் ) ரன்கள்,உஸ்மான் கவாஜா (76 பந்துகள் )50 ரன்கள் , மேக்ஸ்வெல் 40 ரன்கள் (51 பந்துகள்), அலெக்ஸ் காரே 36*ரன்கள்(37 பந்துகள்),பாட் கம்மின்ஸ் 0* களத்தில் இருந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 236 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.
தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். ரோகித் சர்மா 37,தவான் 0,கோலி 44,ராயுடு 13 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதன் பின்னர் இணைந்த தோனி மற்றும் ஜாதவ் ஜோடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது.
இறுதியாக இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.களத்தில் தோனி 59*,ஜாதவ் 81* இருந்தனர்.
இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி வருகின்ற 5 -ஆம் தேதி நாக்பூரில் நடைபெறுகிறது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…