இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியாவிற்கு அடித்த ஜாக்பார்ட்: ஆடி ஏ6 கார் பரிசு..!

Default Image

 

இந்திய கிரிக்கெட் டீமில் உள்ள சிறந்த பவுலவர்களில் ஹர்த்திக் பாண்டியாவும் ஒருவர் இவரது விளையாட்டு திறமையை இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்திய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருதான இந்தியன் ஸ்போட்ஸ் ஹார்னர் விருதில் “பிரேக் த்ரு பேர்பாமன்ஸ்” விருது கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியவுக்கு வழங்கப்பட்டது. அந்த விருதை பெற்றமைக்காக ஆடி நிறுவனம் அவருக்கு ஆடி ஏ6 35டிடிஐ என்ற காரை பரிசாக வழங்கியுள்ளது.

இதன் மூலம் ஹார்த்திக் பாண்டியாவின் சொகுசு கார் கராஜில் ஆடி ஏ6 காரும் இணைந்துள்ளது. அவரிடம் ஏற்கனவே ரேஞ்ச் ரோவர் வோக் என்ற எஸ்.யூ.வி சொகுசு காரும் உள்ளது. தற்போது அதனுடி ஆடி ஏ6 காரும் இணைந்துள்ளது.

ஆடி ஏ6 காரை பொறுத்தவரையில் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகி வரும் ஆடி கார் இது. இது மெர்சிடியஸ் பென்ஸ் இ கிளாஸ், பி.எம்.டபிள்யூ 5 சீரியஸ், ஆகிய கார்களுக்கு இது போட்டியாக திகழ்கிறது. ஆடி ஏ6 35 டிடிஐ மும்பையில் ரூ 65 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது,.

ஆடி ஏ6 காரை பொருத்தவைர 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் டீசல் இன்ஜின் பெற்றுள்ளது. இது 190 பிஎச்பி. பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. பிரண்ட் வீல் டிரைவ் உள்ள இந்த வண்டியில் 7 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உள்ளது. இது அதிகபட்சமாக 166 கி.மீ., வேகம் வரை செல்லக்கூடியது. இந்த காரில் பெட்ரோல் வேரியண்டும் விற்பனைக்கு உள்ளது.

இதன் பெட்ரோல் வேரியண்ட் டீசல் வேரியண்ட்டை விட ரூ 3 லட்சம் குறைவாக கிடைக்கிறது. அது 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 190 பிஎச்பி பவர், 320 என்எம் டார் திறனை வெளிப்படுத்தக்கூடியது. பெட்ரோல் மாடலும் 7 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. பாண்டியாவிற்கு வழங்கப்பட்ட காரில் 8 ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., ஈ.எஸ்.பி. ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார், க்ரூஸ் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு, உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்