இதுவரை இவ்வளவு மோசமா பார்த்ததில்லை… இந்திய டெஸ்ட் ஜெர்சியை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.!

IndianJerseydream11

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடும் இந்திய அணியின் டெஸ்ட் ஜெர்சிக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் செய்துவருகின்றனர்.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நாளை இரு அணிகள் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதில் விளையாடும் இந்திய அணியின் ஜெர்சியில் புதிதாக ஸ்பான்சராக இணைந்துள்ள ட்ரீம் 11 இடம்பெற்றுள்ளது.

இந்த புதிய ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்களின் புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டது. இந்த ட்ரீம் 11 இடம்பெற்ற புதிய ஜெர்சியை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர். இவ்வளவு மோசமான ஜெர்சியை பார்த்ததில்லை எனவும், இதற்கு பைஜூஸ் இருந்திருக்கலாம் எனவும் ட்விட்டரில் குமுறி வருகின்றனர்.

இனி இந்திய டெஸ்ட் ஜெர்சியில் முழுவதும் ட்ரீம் 11 லோகோ தான் இடம்பெறும், பாரம்பரிய வெள்ளை நிறத்துக்கு இடம் இருக்காது என ஒரு ரசிகர் பதிவிட, வீதிகளில் விளையாடும் வீரர்களின் ஜெர்சியே இதை விட நன்றாக இருக்கும், ட்ரீம் 11 இந்திய அணியின் ஜெர்சியை கெடுத்துவிட்டது எனவும் ரசிகர்கள் ட்விட்டரில் கலாய்த்து வருகின்றனர்.

இந்திய அணியின் முதன்மை ஸ்பான்சராக பிரபல ட்ரீம் 11, ஜூலை 2023 முதல் மார்ச் 2026 வரை ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்