புகழ்பெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின்டெண்டுல்கர் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளது என்பது பலருக்கு தெரிந்த ஒன்று தான். எனவே அவருடைய சாதனைகளில் சில சாதனைகளை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முறியடித்துவிட்டால் பலரும் சச்சின் உடன் விராட்கோலியை ஒப்பிட்டு பேசுவார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி ” சச்சினுடன் தன்னை ஒப்பிட்டு பேசவேண்டாம் என தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா நடத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய விராட் கோலி ” என்னைப் பொறுத்தவரை, சச்சின் எப்போதும் ஒரு லெஜண்ட். அவர் எனக்கு ரோல் மாடல். அவரை என்னிடம் ஒப்பிட்டு பேசாதீர்கள்.
நாம் அனைவரும் தேடும் உத்வேகம் மற்றும் ஆறுதலின் ஆதாரம் அவர். அவருடன் என்னை ஒப்பிட்டு பேசுவது எனக்கு வேதனையாக இருக்கிறது. எனவே, என்னை மட்டுமில்லை யாரையும் சச்சினுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் அவர் என்னில் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் வித்தியாசமானது. ஒப்பிட்டுப் பார்ப்பது மற்றும் புள்ளிவிவரங்களை அனைவரும் ரசிக்க விரும்புபவர்கள், பரவாயில்லை.
மக்கள் எந்த வழியில் பார்த்தாலும், அந்த எதிர்பார்ப்பை என்னால் முன்னெடுத்துச் செல்ல முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என கூறியுள்ளார். இவர் இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…