‘அம்மா சொன்ன அந்த வார்த்தை தான் …’ ! புல்லரிக்கும் விஷயத்தை பகிர்ந்த பேட் கம்மின்ஸ் !

Pat Cummins with his mother

பேட் கம்மின்ஸ் : ஹைதரபாத் அணியின் கேப்டனான பேட் கம்மினிஸ் தனது அம்மா அவரிடம் சொன்ன வார்த்தைகளை தற்போது தி டெஸ்ட் சீசன் தொடரில் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியின் புதிய கேப்டனான பேட் கம்மின்ஸ் இந்த தொடரில் தனது அணியை சிறப்பாக வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். அதற்கு உதாரணம் தான் 8 வருடங்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் இருந்த ஹைதராபாத் அணியை இந்த தொடரில் இறுதி போட்டிக்கு கொண்டு சென்றுருக்கிறார்.

எந்த நேரத்தில் எந்த பவுலரை பந்து வீச வைக்க வேண்டும், எந்த இடத்தில் சரியாக ஃபீலடிங் நிற்க வைக்க வேண்டும் என ஐபிஎல் தொடரில் மற்ற அணிக்கு கேப்டனாக செயல்படும் இந்திய வீரர்களுக்கு இவர் ஒரு எடுத்துக்கட்டாகவே இருக்கிறார். தற்போது, அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்த தி டெஸ்ட் சீசன் 3ல் (The Test Season 3) பேட் கம்மின்ஸ் தனது வாழ்க்கையில் அவரது அம்மா அவரிடம் சொன்ன எமோஷனல் கலந்த வார்த்தைகளை அதில் பகிர்ந்திருப்பர்.

அதை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அவரது அம்மா அவரிடம் கூறியதாவது, “போ.. இந்த உலகத்தை எதிர்கொள்.. யாரோ ஒருவர் இந்த உலகத்தில் அற்புதமான சில விஷயங்களை செய்யப் போகிறார்கள்.. அது ஏன் நீயாக இருக்கக் கூடாது” என கூறி இருக்கிறார். மேலும், அந்த வார்த்தை என்னை இந்த அளவுக்கு உயர்த்திருக்கிறது என பேட் கம்மின்ஸ் அந்த வீடியோவில் பகிர்ந்திருப்பார்.

தற்போது, இந்த நாட்களில் பேட் கம்மின்ஸ் தாயின் வார்த்தைகளை கம்மின்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வருகிறார். இதற்கு முன் இந்திய அணியை உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வென்று கோப்பையை தட்டி தூக்கி இருந்தார். அதன் பின் 50 ஓவர் உலகக்கோப்பையிலும் கேப்டனாக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.

மேலும், டி20 உலகக்கோப்பை வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார். தற்போது உலகின் சிறந்த டி20 லீக் தொடரில் கேப்டனாக கம்மின்ஸ் களமிறங்கி முதல் சீசனிலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இப்படி தொடர்ந்து சாதனைகளை குவித்து வருவதை பார்க்கையில் தனது தாய் சொன்ன வார்த்தைகளை மகன் பேட் கம்மின்ஸ் ஒரு நல்ல மகனாக நிறைவேற்றி வருகிறார் என இணையத்தில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested