விராட் கோலி சுமார் 3 ஆண்டுகளாக சரிவை சந்தித்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாஃபர், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட்டின் படத்தை வெளியிட்டு அதற்குத் “விடியலுக்கு முன் இருக்கும் இருண்ட நேரம் தான் இது” என்று தலைப்பிட்டுள்ளார்.
நவம்பர் 2019 முதல் கோலி சதம் அடிக்கவில்லை, மேலும் 71வது சர்வதேச சதத்திற்கான அவரது நீண்ட காத்திருப்பு இன்னமும் தொடர்கிறது. தற்போதைய இங்கிலாந்து சுற்றுப்பயணம் கோலிக்கு மறக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. 33 வயதான அவர் முழங்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாக முதல் ஒரு நாள் சர்வதேச போட்டியில் இருந்து விலகினார். இந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்த கோலி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் முதல் 10 தரவரிசையில் தனது இடத்தை இழந்துள்ளார். இருப்பினும், ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வானை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
இன்று (ஜூலை 14) நடக்கவிருக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி ‘ஹோம் ஆஃப் கிரிக்கெட்’ லார்ட்ஸில் விளையாடப்படுகிறது. மேலும் மென் இன் ப்ளூ இந்த தொடரில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் நம்பிக்கையில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி முதலிடம் பிடித்தால், 2014க்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் பெரும் முதல் ஒருநாள் தொடரின் வெற்றியாகும். கடந்த 2018ஆம் ஆண்டு தொடரின் தொடக்க ஆட்டத்தை வென்றிருந்தாலும் 1-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ள ஆசிய கோப்பை 2022 மற்றும் அதற்கு முன்னதாக ஜூலை 22 ஆம் தேதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடருக்கான அணியில் பும்ரா மற்றும் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…