WTC இறுதிப் போட்டியை வெல்வது இந்தியா இல்லை, ஆஸ்திரேலியா தான்… வாசிம் அக்ரம்.!

Aus Favourites Akram

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்வதற்கு ஆஸ்திரேலியாவிற்கு  தான் அதிக வாய்ப்பு என வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை மறுநாள் (ஜூன்-7 இல்) வரலாற்று சிறப்புமிக்க லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரார்கள் தீவிர பயிற்சி செய்துவருகின்றனர். இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இம்முறை டெஸ்ட் உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டி குறித்த தனது கருத்துக்கணிப்பை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, டெஸ்ட் உலகக்கோப்பையை வெல்லும் அணியாக ஆஸ்திரேலியா தான் அதிக விருப்ப அணியாக இருப்பதாக கூறியுள்ளார். ஆடுகளம் வேகபந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சற்று தடுமாறக்கூடும்.

மேலும் பிட்ச் பவுன்ஸ்க்கு ஒத்துழைப்பதாகவும் இருப்பதால் இந்திய அணியினர் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டியது அவசியமாகிறது. ஸ்விங் பவுலிங்கிற்கு பெயர் பெற்றவரான வாசிம் அக்ரம், டியூக்ஸ்(Dukes) பந்து, கூக்கபரா பந்தை விட    அதிகம் திரும்பும் (ஸ்விங்) என்பதால் இது இந்திய அணிக்கு தலைவலியை உண்டாக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கடந்த சில காலங்களாக ஸ்விங் மற்றும் பவுன்ஸ் பந்துகளுக்கு எதிராக திணறி வருகின்றனர். லண்டன் ஓவல் மைதானத்தை பொறுத்தவரை ஆகஸ்ட் இறுதி மற்றும் செப்டம்பர் ஆரம்ப வாரங்களில் இங்கு பிட்ச் உலர்ந்ததாக(Dry) பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும், ஆனால் டெஸ்ட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஜூன் தொடக்கத்தில் நடக்கிறது.

இந்த சமயங்களில் ஓவல் மைதானம் புதிதாக(Fresh Pitch) இருக்கும், இது ஸ்விங்கிற்கு கூடுதலாக ஒத்துழைக்கும், அதாவது அதிக நேரம் பந்து ஸ்விங் ஆகும், மேலும் பவுன்சும் ஆகும். இதுபோன்ற மைதானங்களில் ஆஸ்திரேலிய அணி அதிகமுறை விளையாடியிருப்பதால் அதன் தன்மை அவர்களுக்கு நன்கு தெரியும். இதனால் டெஸ்ட் உலகக்கோப்பையை வெல்வதில் அதிக ஃபேவரைட் அணியாக ஆஸ்திரேலியா தான் உள்ளது என்று அக்ரம் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்