Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான விரேந்திர சேவாக் இந்த ஆண்டில் மிக எதிர்பார்ப்புடன் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு அதனைத் தொடர்ந்து உடனேயே டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற ஜூன்-1 தேதி தொடங்குகிறது.
இதற்கு ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது அதிலும் இந்திய கிரிக்கெட் அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெற போகிறார்கள் எந்தெந்த வீரர்களை பிசிசிஐ அறிவிக்க போகிறது எனும் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், பல கிரிக்கெட் பிரபலங்கள் தங்களுக்கு பிடித்தமான இந்திய அணியை அறிவித்து வருகின்றனர்.
தற்போது, இந்திய இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான விரேந்திர சேவாக் அவர் பங்கிற்கு அவருக்கு விருப்பப்பட்ட இந்திய அணியை அறிவித்துள்ளார். அந்த அணியில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ராஜஸ்தானின் டெத் பவுலரான சந்திப் ஷர்மாவை அணியில் சேர்த்துள்ளார்.
இதெல்லாம் சரி என்னவென்றால் பல கிரிக்கெட் பிரபலங்கள் ஹர்திக் பாண்டியாவை டி20 இந்திய அணியில் சேர்க்க சொல்லி பரிந்துரைக்கும் போது முதல் முறையாக விரேந்திர சேவாக் ஹர்திக் பாண்டியாவை அவரது அணியில் இருந்து ஓரங்கட்டி உள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்து வருகிறது.
ரோகித் சர்மா (கேப்டன்), ஜெயஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங்/சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குலதீப் யாதவ், பம்ரா, முஹம்மது சிராஜ், சந்திப் ஷர்மா.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…