33 ரன்கள் முன்னிலையுடன் 145 ரன்களில் சுருண்டது இந்தியா அணி.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று களமிறங்கிய இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணியின் பந்து வீச்சில் அக்சர் படேல் 6 விக்கெட்டுகளும் ,அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.இதன் பின் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் நிதானமாக விளையாடினார்கள் .இதற்கிடையில் சுப்மான் கில் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்பு களமிறங்கிய புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் .பின் விராட் கோலி 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 33 ஓவர்களில் 99 ரன்களை எடுத்தது.தற்பொழுது களத்தில் ரோகித் ஷர்மா 57(82) மற்றும் ரகானே 1(3) களத்தில் இருந்தனர்.இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது.இந்திய அணி இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.இதனால் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 33 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ரகானே 7 ரன்கள், ரோகித் 66 ரன்கள், பண்ட் 1 ரன், சுந்தர் மற்றும் அக்சர் டக் அவுட், அஸ்வின் 17 ரன்கள்,பும்ரா 1 ரன் என எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் கேப்டன் ரூட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்மேலும் ஜாக் லீச் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் பின் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்க உள்ளது.
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…