இந்திய அணியில் இவரை அவுட் செய்வது கடினம்- ஆரோன் பின்ச்
ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது.
முதல் 20 ஓவர் போட்டி நாளை மொகாலியில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச், விராட் கோலி பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். விராட் பற்றி அவர் மேலும் கூறியதாவது, விராட் கோலி ஒரு அற்புதமான வீரர். அவர் தனது 15 வருட கிரிக்கெட் வரலாற்றில், உலகின் மிகச் சிறந்த வீரர்களுள் தானும் ஒருவர் என்பதை நிரூபித்துள்ளார்.
கோலியை, அவுட் செய்வது மிகவும் கடினம் என்றும் அதற்கு மிகவும் தைரியமான வீர்ர் தேவை என்றும் பின்ச் கூறியுள்ளார். மேலும் கோலி தனது சர்வதேச கிரிக்கெட்டில் 71 சதங்கள் அடித்துள்ளார் அவை மிகவும் அற்புதமானவை என்றும் பின்ச் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன், விராட் கோலியின் தலைமைப் பண்பைப் பாராட்டி பேசியுள்ளார்.
விராட் கோலி கேப்டன் ஆன பிறகு இந்திய அணியை பல வெற்றிகளுக்கு அழைத்துச் சென்றார். மேலும் இந்திய அணியின் விளையாடும் விதத்தையே மாற்றியுள்ளார் என்று ஜான்சன் கூறியுள்ளார். 2017இல் விராட் கோலி இந்திய அணியின் முழு நேர கேப்டன் ஆனார் என்பது குறிபிடத்தக்கது.