விராட் கோலிக்கு பந்து வீச மிகவும் கடினமாக இருந்தது- ஜேம்ஸ் ஆண்டர்சன்.!
விராட் கோலிக்கு பந்து வீச மிகவும் கடினமாக இருந்தது என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் அண்மையில் ஒரு புதிய சாதனையை படைத்திருந்தார், ஆம் சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார், இதற்காக பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறினார்.
இந்நிலையில் சமீபத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியது, இந்தியா அணி 2014 ஆம் ஆண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டு மேற்கொண்ட இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை ஒப்பிட்டு விராட் கோலி ஆட்டத்தைப் பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியது கடந்த 2014 ஆம் ஆண்டு நான் விராட் கோலிக்கு எதிராக பந்து வீசிய போது நான் வெற்றியை கண்டேன். மேலும் அடுத்ததாக கடந்த 2018 ஆம் ஆண்டும் அவர் முற்றிலும் வேறு ஒரு மனிதராக மாறி இருந்தார், மிகவும் சூப்பராக பயிற்சி எடுத்து அவருக்கு எதிராக பந்துவீச மிகவும் கடினமாக இருந்தது என்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.
மேலும் பேசிய ஜேம்ஸ் ஆண்டர்சன் பொதுவாக ஒரு பந்து வீச்சாளர்களுக்கு சிறப்பான பேட்ஸ்மேனுக்கு சிறப்பாக பந்து வீச வேண்டும் என்பது ஒரு குறிக்கோள் மற்றும் ஆசையாக இருக்கும், அதே போல் விராட் கோலிக்கு நான் பந்துவீச எனக்கு மிகவும் ஆசையாக இருந்தது.
அவரை வெளியேற்ற நான் மிகவும் கடினமான பந்துகளை வீசினேன் ஆனால் அவர் நீண்ட நேரம் களத்தில் நின்று மிகவும் அற்புதமாகவும் அதிரடியாகவும் விளையாடினர், என்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். மேலும் விராட் கோலி சமீபத்தில் தான் எதிர்கொண்ட பந்து வீச்சாளர்களில் மிகவும் சிறப்பான பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.