ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ மற்றும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ஆகிய இருவரையும் எதிர்கொள்ள கடினமாக இருந்தது என ரோகித் சர்மா தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவிடம் சமூக வலைத்தள கலந்துரையாடலின் போது சில கேள்வி கேட்கப்பட்டது. அதில், ஆரம்ப காலத்தில் உங்களை மிரட்டிய பந்துவீச்சாளர் யார் என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ மற்றும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் எனக் கூறினார். பிரெட்லீ கடந்த 2007 ஆம் ஆண்டு ஒருநாள் தொடரின் போது மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுவார். அவரது பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ளவது சிந்தித்துகொண்டே இருப்பேன். இதனால் தூக்கத்தை தொலைத்து இருக்கிறேன் என கூறினார்.
அதேபோல தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் நல்ல வேகத்துடன் பந்தை ஸ்விங் செய்வார். அவரது பந்து வீச்சு நம்பமுடியாத அளவிற்கு இருக்கும். அவர் பந்தை ஒருபோதும் சந்திக்க கூடாது என நினைப்பேன் என்று தெரிவித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதம் அடித்துள்ள ரோகித் சர்மாவிடம் உங்களது சிறந்த இரட்டை சதம் இது..? என கேட்கப்பட்டது. அதற்கு எனது இரட்டை சதங்கள் அனைத்தும் ஒவ்வொரு வகையிலும் சிறப்பானது என கூறினார்.
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…