நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் அடித்த சிக்ஸர்களை தான் ரசித்ததாக ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
நேற்று ஐபிஎல் தொடரின் 45 லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 195 ரன்கள் குவித்தனர். இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா 21 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். ஆம் 7 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் என மைதானத்தில் வன வேடிக்கை காட்டினார்.
மும்பை அணியை தொடர்ந்து 196 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலே 2 விக்கெட் இழந்தது, அடுத்ததாக தொடக்க ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் மிகவும் அதிரடியாக விளையாடினார்கள். மேலும் பேன்ஸ்டோக்ஸ் சதம் விளாசினார். அவரை தொடர்ந்து சஞ்சு சாம்சன் அரைசதம் விளாசினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18. 2 ஓவரில் 2 விக்கெட்டை இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் இந்த போட்டி முடிவடைந்தவுடன் பேசிய மும்பை அணி வீரர் ஹர்திக் பாண்டியா கூறுகையில் ” ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அதிர்ஷ்டம் அவர்களின் பக்கத்தில் இருந்தது. தொடக்கத்தில் நாங்கள் இரண்டு விக்கெட்கள் எடுத்தோம் அப்போது நாங்கள் வெற்றிபெற்றுவிடுவோம் என்று நினைத்தோம் . ஆனால் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் சிறப்பாக வியாடினார்கள். அவர்கள் அடித்த சிக்ஸர்களை நான் ரசித்தேன் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…
சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…
கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நேற்று…