பனிப்பொழிவு அதிகளவில் இருந்ததால் பந்து வீச கடினமாக இருந்தது – சென்னை அணி பயிற்சியாளர்..!

நேற்று முன்தினம் இரவு மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அறிமுக அணியாகிய லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. சென்னை அணி சந்தித்த இரண்டாவது தோல்வி இது. தோல்விக்குப் பின்னர் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்பொழுது பேசிய அவர், ஆரம்பகட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த முடியாத நிலை இருந்ததாகவும், ஈரப்பதம் அதிக அளவில் இருந்ததால் பந்தை சரியாக பிடித்து வீசுவதற்கு கிரிப் கிடைக்காமல் சிரமப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மைதானத்தில் பனிபொழிவு அதிக அளவில் இருந்ததால் பீல்டிங் செய்வது கடினமாக இருந்ததாகவும், இந்த சீதோசன நிலை இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருந்ததாகவும், அதை அவர்கள் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025