‘அது எனக்கு ஆச்சர்யமா இருந்தது’! கம்பீரை மறைமுகமாக சாடிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்..!

Gautam Gambhir

பாகிஸ்தான் : இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என தோல்வியை கண்டதால் ரசிகர்கள் இந்திய அணியை நேற்று முதல் பல கேள்விகளை எழுப்பியும், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீரை பல மீம்கள் உருவாக்கி ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது யூடுயூப் சேனல், கமெண்ட்ரி போன்றவற்றிலும் இந்திய அணியின் இந்த தோல்வியை குறித்து அவர்களது கருத்தை பேசி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் இந்த கடைசி போட்டியில் விளையாடிருக்கலாம் எனவும் அவரை வெளியில் பெஞ்சில் உட்கார வைத்ததை குறித்தும் முன்னாள் பாகிஸ்தான் வீரரான கம்ரான் அக்மல் கூறி இருக்கிறார்.

இது குறித்து அவரது யூட்யூப் சேனலில் பேசிய அவர், “கே.எல். ராகுல் வெளியே பெஞ்சில் அமர்ந்தது எனக்கு பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அவர் ஒரு தொடக்க ஆட்டக்காரர், நீங்கள் அவரை விக்கெட் கீப்பராக விளையாடச் செய்தீர்கள், அவருக்கு 8வது விக்கெட்டில் பேட்டிங் கொடுத்தீர்கள்.

அவரை இப்படி உட்கார வைத்தது புத்திசாலித்தனமான முடிவு என்று நான் நினைக்கவில்லை. அவருக்கு பதிலாக நீங்கள் துபேவை உட்கார வைத்திருக்கலாம். அதே போல் நீங்கள் வேகப்பந்து வீச்சாளருக்கு பதிலாக அக்சர் படேலைப் பயன்படுத்தியிருப்பீர்கள், ரியான் பராக்கை அணியில் விளையாட வைத்தீர்கள் என்றால் கேஎல் ராகுலையும் எளிதாக விளையாட வைத்திருக்கலாம்.

இதனால், உங்கள் பேட்டிங் வரிசை வலுவாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்,” என அவர் கூறினார். இவர் இப்படி பேசியதை இணையத்தில் பதிவிட்டு, கம்ரான் அக்மல் மறைமுகமாக கவுதம் கம்பீரை தாக்கி பேசி இருக்கிறார் என கூறி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Indonesia Landslide
bcci
mysskin - Aruldoss
seeman ponmudi
RN Ravi - Congress
ADMK - EPS