மும்பை கப் அடிக்குறதுலாம் ரொம்ப கஷ்டம் ! ஏமாற்றம் அடைந்த பிரைன் லாரா !

Brian Lara [file image]

ஐபிஎல் 2024 : மும்பை இந்தியன்ஸ் அணியை மிகவும் நம்பி இருந்த பிரைன் லாரா ஏமாற்றத்துடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸில் பேசி இருக்கிறார்.

கடந்த மார்ச் -22 தேதி முதல் கோலாகலமாக தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் தற்போது மிகவும் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் எல்லா அணிகளும், அணி வீரர்களும் தங்களது தனி திறமையை காட்டிக் கொண்டே வருகின்றனர். அதே போல மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது. ஹர்திக் பாண்டிய தலைமையில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளையும் தோல்வியுற்று இருந்தது.

அதன் பிறகு அணியில் சில மாற்றங்களை செய்ததும் தொடர்ந்து இரண்டு போட்டிகளை மும்பை அணி வெற்றி வென்றது. அதிலும் குறிப்பாக சூர்யகுமார் யாதவ் காயத்தில் இருந்து மீண்டு வந்தது மும்பை அணிக்கு ஒரு பக்க பலமாகவே அமைந்தது. அதன்பிறகு சென்னை அணியுடன் மோதிய போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. அந்த போட்டியில் சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சுதான் போட்டியை வெற்றி பெற வைத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாரா ஸ்டார் ஸ்போர்ட்ஸில் சமீபத்தில் அந்த போட்டியை குறித்தும் மும்பை அணியின் விளையாட்டை குறித்தும் பேசி இருந்தார். அவர் பேசுகையில், “இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை இங்கே பலரும் அவர்களை கோப்பையை வெல்லக்கூடிய அணியாக பார்க்கின்றனர். அதற்கான காரணம் நீங்கள் என்னவென்று பார்த்தால் மும்பை அணியின் பேட்டிங்காக தான் இருக்கும்.

கடந்த பெங்களூரு அணியுடனான போட்டியில் வெறும் 15 ஓவர்களில் 196 என்ற இலக்கை எளிதில் எட்டியதால் சென்னை அணியுடனான போட்டியை எளிதில் வெற்றி பெறுவார்கள் என்று நினைத்தோம். ஆனால், ரசிகர்களுடன் நானும் ஏமாற்றம் தான் அடைந்தேன். மேலும், சென்னை அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததால் அந்த போட்டியை மும்பை அணி தோல்வியடைந்தது. ஆனால், நீங்கள் அப்படியே மும்பை அணியின் பவுலிங் வரிசியை பாருங்கள் சென்னை அணி  உடனான தோல்விக்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

மும்பை அணியில் பும்ரா ஒருவரை தவிர வேறு யாரும் அவரை ஆதரித்து அவருடன் சிறப்பான பந்து வீச்சில் செயல்படவில்லை. இப்படி போனால் இந்த தொடரில் மும்பை அணி கோப்பையை வெல்வது கடினம் தான். மேலும், அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டிய விரைவாக அணியில் இருக்கும் மிக சிறந்த பவுலர்களை அடுத்தடுத்த போட்டிகளில் கண்டு புடிக்க வேண்டும்”, என்று பிரைன் லாரா மும்பை அணியை பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்