மும்பை இந்தியன்ஸ் அணியில் டிரெண்ட் போல்ட் விளையாடுவது கடினம் தான்
கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.மேலும், உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்களை கொண்டுள்ளதால், இந்த தொடரை கண்டிப்பாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. அதன்படி, இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் செப்டெம்பர் மாத இறுதியில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டது. அதன்படி, ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் அனுமதி கோரியது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஐபிஎல் தொடர்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்காவிட்டால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் எனவும், ஐபிஎல் தொடரை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவை என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் கூறினார்.
இந்நிலையில் செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை நடத்த ஆலோசனை செய்துள்ளோம் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.மேலும் நவம்பர் 8-ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிக்காக பல கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த முறை ஏலத்தில் எடுத்துள்ள நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் ஐபிஎல் போட்டி விளையாடுவதை எனது குடும்பத்துடன் கலந்து ஆலோசனை செய்த பிறகே கூறுவேன் என்று கூறியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…