அது பெருசா பாதிக்காது! ஹர்திக்கை பாராட்டும் காலம் சீக்கிரம் வரும் – சுரேஷ் ரெய்னா!
சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற இந்திய அணியை பற்றி பேசியதுடன், ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார்.
ஐபிஎல்லை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அடுத்து ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பையானது நடைபெற உள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ளதால் அதற்க்கான ஏற்பாடுகளும் மிகத்தீவிரமாக நடைபெற்றும் வருகிறது.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் இந்த டி20 உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இதற்கு பலவித சர்ச்சைகளும், பல கேள்விகளும் தற்போது வரை எழுந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு புறம் இருக்கையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான சுரேஷ் ரெய்னா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணியை பற்றி கூறியதுடன் பாண்டியாவிற்கு ஆதரவாகவும் கூறி இருந்தார்.
அவர் பேசுகையில், “இந்த உலகக்கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் காலை 10 மணி அளவில் நடைபெறும் அதனால் மைதானத்தில் பிட்சுகள் சற்று சரிந்தே காணப்படும். அதனால் நம் வீரர்கள் விரைவில் அந்த விக்கெட்டுக்கு பழகி சூழ்நிலைக்கு ஏற்றவாறு திரும்ப வேண்டும். மேலும், ரோஹித் சர்மா ஒரு நல்ல கேப்டனாக நல்ல பார்மில் இருக்கிறார் அதே போல விராட் கோலியும் ஒரு பேட்ஸ்மேனாக சிறந்த பார்மில் இருக்கிறார்.
அவருடன் அதிரடி பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவிர்க்கும் பந்து நன்றாகவே அவரது பேட்டில் பந்து படுகிறது. மேலும், பவ்ரபிளேவில் பந்து வீச இரண்டு இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அக்சர் படேலும், ரவீந்திர ஜடேஜாவும் ஸ்பின்னராக செல்கிறார்கள் இதனால் இந்திய அணி ஒரு சமநிலையில் உள்ளது.
அவர் (ஹர்திக் பாண்டியா) உண்மையிலேயே இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடியுள்ளார். தற்காலிகமாக இருக்கும் அவரது மோசமான பார்ம் அவரை தனிப்பட்ட முறையிலும், இந்திய அணியையும் அது பாதிக்காது. அவர் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் போது அனைவரும் அவரைப் பாராட்டுவார்கள்” என்று சுரேஷ் ரெய்னா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பாண்டியாவிற்கு ஆதரவாக பேசி இருந்தார்.