போட்டியை பொறுத்து தான் ..அவர்களை எடுக்க முடியும் – கேப்டன் ரோஹித் சர்மா!
ரோஹித் சர்மா: டி20 உலகக்கோப்பையானது தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய நாளில் இத்தொடரின் 8-வது போட்டியாக இந்திய-அயர்லாந்து அணிகள் நியூயார்க்கில் மோதவுள்ளது. இந்த போட்டிக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்தியா அணியின் கேப்டனான ரோஹித் சர்மா பேசி இருக்கிறார்.
அவர் பேசிய போது, “இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு பெரிய பங்காக அமையும். எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக ஆல்-ரவுண்டர்களான அக்சர் பட்டேலும் மற்றும் ஜடேஜாவும் இருக்கிறார்கள். மேலும், அவர்கள் அணியின் சமநிலைக்கு தேவை.
அதே போல வேகப்பந்து வீச்சிலும் ஆல்-ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியாவும் மற்றும் சிவம் துபேவும் உள்ளனர். இதனால் ஒவ்வொரு போட்டியை பொறுத்தே அவர்களை அணியில் எடுக்க முடியும்”, என்று அவர் கூறி இருந்தார்.