ஸ்டிக்கை தெறிக்கவிட்ட இஷாந்த் ஷர்மா..! கீழே விழுந்தும் ரஸ்ஸல் செய்த நெகிழ்ச்சி செயல் !

Andre Russel [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் அதிரடி காட்டி கொண்டிருந்த ரஸ்ஸல் விக்கெட்டை இஷாந்த் சர்மா எடுத்த போது, ரஸ்ஸல் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

நடந்து கொண்டிருக்கும் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரேன் மிக சிறப்பாக டெல்லி அணியின் பவுலர்களை அடித்து பறக்கவிட்டார் அதிரடி காட்டிய அவர் 39 பந்துகளில் 85 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து இளம் வீரர் ரகுவன்ஷி களமிறங்கி அதிரடி காட்டி அரை சத்தை கடந்து 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய ஆன்ட்ரே ரஸ்ஸல் ஆக்ரோஷமான தனது ஆட்டத்தை வெளிக்காட்டினார். ஏற்கனவே, 12.3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 160 ரன்கள் கடந்து இருந்த நிலையில் களமிறங்கிய ரஸ்ஸல் டெல்லி அணி வீசிய அனைத்து பந்துகளையும் சிக்ஸர், பவுண்டரிகள் பறக்க விட்டார்.

அவரது ருத்ர தாண்டவத்தால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்து உச்சம் பெற்றது.  இந்நிலையில், இறுதி ஓவரை டெல்லி அணியின் இஷாந்த் சர்மா வீசினார்.  அவரது பந்தை எதிர்கொள்ள ரஸ்ஸல் நின்று கொண்டிருந்தார், இஷாந்த் சர்மா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தானது ஸ்டம்பை தெறிக்கவிட்டது.

ஒரு நல்ல யார்கள் பந்தை இஷாந்த் சர்மா வீசியதால் அந்த பந்தை எதிர் கொள்ள முடியாமல் ரஸ்ஸல் தடுமாறி கீழ விழுந்தார், அந்த பந்து 3 ஸ்டிக்கையும் தெறிக்க விட்டது. இதனால் ஆக்ரோஷமாக விளையாடி கொண்டிருந்த ரஸ்ஸல் 19 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தான் கீழே விழுந்தும் போல்டான பிறகும் எழுந்து நின்று அவர் வீசிய பந்தை கை தட்டி பாராட்டி பெவிலியன் திரும்பினார்.

இது பார்ப்போர் அனைவரையும் மனம் நெகிழ வைத்ததுடன், கிரிக்கெட் ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை கொண்ட ரஸ்ஸலையும் பாராட்டி வருகின்றனர். இது போல ஸ்போர்ட்ஸ்மென்ஷிப் இவர்களை பார்த்து வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாகவும் அவர்களை ஊக்கிவிக்கும் வகையிலும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA