மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரின் 15வது சீசனின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். மும்பை அணியின் தொடக்க வீரராக ரோகித் சர்மா, இஷன் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா குல்தீப் யாதவ் வீசிய பந்தில் ரோவ்மேன் பவலிடம் கேட்ச் கொடுத்து 41 ஒரு ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய அன்மோல்பிரீத் சிங் 8, கீரன் பொல்லார்ட் 3 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய திலக் வர்மா 15 பந்தில் 3 பவுண்டரிகள் என மொத்தம் 22 ரன்கள் விளாசி வெளியேறினார்.
ஆட்டம் தொடங்கத்திலே இருந்து சிறப்பாக விளையாடிய இஷன் கிஷன் அரைசதம் விளாசி 81* ரன்கள் குவித்தார். அதில், 11 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசினர். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியில் குல்தீப் யாதவ் 3, கலீல் அகமது 2 விக்கெட்டும் எடுத்தனர்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…