#SportsUpdate: இந்திய அணி பந்து வீச தேர்வு.. இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் சேர்ப்பு..!
2-வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரை அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம்நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில், இரண்டாம் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில், 2-வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
கே.எல்.ராகுல், இஷான் கிஷன், விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர் ), ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹார்டிக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி வீரர்கள்:
ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர் ), டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ, ஈயோன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், ஜோஃப்ரா ஆர்ச்சர், டாம் கரண், கிறிஸ் ஜோர்டான், ஆதில் ரஷீத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியில் தவான், ஆக்சர் படேல் ஆகியோருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் மார்க் வூட்டுக்கு பதிலாக டாம் கரண் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.