பிளே-ஆஃப் போட்டிக்கும் ரிசர்வ் நாள் உண்டா ? இதுதான் ஐபிஎல் ரூல்ஸ் !
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றில் நடைபெறும் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா, அதை பற்றி ஐபிஎல் விதிகள் என்ன சொல்கிறது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானாது லீக் போட்டிகள் எல்லாம் நிறைவு பெற்று தற்போது பிளே ஆஃப் சுற்றானது தொடங்கவுள்ளது. இந்த பிளேஆஃப் சுற்றின் முதல் போட்டியான குவாலிபயர்-1 போட்டியில் இன்று கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இந்த ஆண்டு மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் இந்த பிளே ஆஃப் சுற்றில் மழை வந்து போட்டி நடக்காமல் போனால் ரிசர்வ் நாள் உண்டா என்பதை பற்றி பார்ப்போம்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நடைபெற்ற இறுதி போட்டியை நம்மால் மார்க்க முடியாது என்றே கூறலாம். குஜராத் அணிக்கும், சென்னை அணிக்கும் இடையே நடைபெற்ற அந்த இறுதி போட்டியில் மழை குறுக்கிட்டு கிட்ட தட்ட 3 நாட்கள் ஓவர்களும் குறைக்கப்பட்டு ஒரு போட்டியானது நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த ஆண்டும் ரிசர்வ் நாள் இருக்குமா என்று கேட்டால் ஆம், உண்டு.
ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இந்த ஆண்டு நடைபெற உள்ள பிளே-ஆஃப் சுற்றில் நடைபெற உள்ள 4 போட்டிகளுக்குமே இந்த முறை ரிசர்வ் நாள் என்பது உண்டு என ஐபிஎல் விதி கூறுகிறது. கடந்த முறை ஐபிஎல் தொடரில் இறுதி போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் நாள் என்பதை ஒதுக்கினார்கள். ஒரு வேலை இன்று நடைபெறும் போட்டியில் மழை குறுக்கிட்டு போட்டியானது நடைபெறுமால் போனால் ரிசர்வ் நாளான மறுநாள் போட்டியை நடத்தலாம்.
இது ஒவ்வொரு பிளே ஆஃப் போட்டிக்கும் இந்த ரிசர்வ் நாள் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அந்த ரிசர்வ் நாளிலும் மழையால் போட்டி நடைபெறவில்லை என்றால் புள்ளிப்பட்டியலில் எந்த அணி முன்னிலையில் இருக்கிறதோ அந்த அணிக்கு கோப்பையை வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நடைபெறும் போட்டியானது டை (Draw) ஆனால் சூப்பர் ஓவர் நடத்தி அதில் வெற்றி பெரும் அணியை வெற்றியாளர் என்று அறிவிப்பார்கள் ஒரு வேளை சூப்பர் ஓவரிலும் டை ஆகி குறிப்பிட்ட நேரத்தை தாண்டி போட்டியின் முடிவு தெரியாமல் சூப்பர் ஓவரிலும் ட்ரா ஆனால் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணியே வெற்றியாளர் என்று அறிவித்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.