இரண்டு பேருக்கும் பிரச்சனையா..? கங்குலியை கண்டுகொள்ளாத விராட் கோலி…வைரலாகும் வீடியோ.!
விராட் மற்றும் டெல்லி அணியின் இயக்குனர் கங்குலி ஆகியோர் கை குலுக்காமல் தவிர்த்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டி முடிந்து இரு அணி வீரர்களும் துணை ஊழியர்களும் வழக்கமான கைகுலுக்கலுக்கு சென்றனர்.
No handshake between Virat Kohli and Sourav Ganguly❓????
????: Jio Cinema pic.twitter.com/o6jEEZ0K5m
— CricTracker (@Cricketracker) April 15, 2023
அப்போது, விராட் கோலி ஃபாஃப் டு பிளெசிஸுக்குப் பின்னால் இருந்தார், கங்குலி டெல்லி தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிற்குப் பின்னால் இருந்தார். கங்குலி டு பிளெசிஸுடன் கைகுலுக்கினார், மேலும் கோலியை வாழ்த்த அவர் வந்தபோது, கோலி அதனை மறுத்ததாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோக்கள். புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Saurav Ganguly ignored Virat Kohli and Walk off where you can see Kohli turned back to see Dada
Once again Dada showed Virat Kohli his place ???? pic.twitter.com/AphU0U3IMO
— R e t i r e d (@Sense_detected_) April 15, 2023
மேலும். கை குலுக்குவதற்கு முன்னதாக, போட்டியின் போது, டெல்லி கேபிடல்ஸ் இன்னிங்ஸின் 18-வது ஓவரில் அமன் கானின் கேட்சை எடுத்த பிறகு, டெல்லி கேபிடல்ஸ் டக் அவுட்டில் கங்குலி அமர்ந்திருந்தார். அவரை பார்த்து கோலி முறைத்தார். அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.
VIRAT KOHLI ????
????: Jio Cinema pic.twitter.com/o0nxegCHod
— CricTracker (@Cricketracker) April 15, 2023
முன்னதாக கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோதே விராட் கோலிக்கும் அவருக்கு இடையே மனக்கசப்பு இருந்ததாகவும், இதனால், இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக விராட் கோலி நீக்கப்பட்டார் என விமர்சனங்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.