அப்போ பிரச்சனை முடிஞ்சிதா ? ரோஹித்தை கட்டி அணைத்த பாண்டியா .. வீடியோ வெளியிட்ட மும்பை அணி ..!
IPL 2024 : கடந்த இரண்டு மாதங்களாக மும்பை அணியில் நடைபெற்று வந்த சண்டை தற்போது முடிவுக்கு வந்துருக்கிறது என்று கூறலாம். நாளை தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு கடந்த ஆண்டின் இறுதியில் ஏலம் நடைபெற்றது. இதை ஏலத்தில் கலவையான சர்ச்சைகள் பல நடைபெற்றது. அதில் முக்கியமாக பார்க்க பட்ட ஒன்று தான் மும்பை அணியின் கேப்டன் மாற்றம். மும்பை நிர்வாகம் அந்த ஏலத்தில் குஜராத் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை ட்ரேட் செய்து மீண்டும் மும்பை அணிக்கு எடுத்தது.
Read More :- IPL 2024 : வந்துவிட்டது புதிய ரூல்ஸ் ..! பட்டயை கிளப்ப போகும் பவுலர்ஸ் ..!
மும்பை அணிக்கு எடுத்தது மட்டும் அல்லாமல் மும்பை அணியின் கேப்டனாக 5 ஐபிஎல் கோப்பையை பெற்று தந்த ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி விட்டு அதற்கு பதிலாக பாண்டியவை நியமித்தனர். இதனால் பெரும் சர்ச்சையில் மும்பை அணி சிக்கியது மட்டும் அல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் பயங்கர பின்னடைவையும் சந்தித்தது. பல ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை சமூக தளமான இன்ஸ்டாகிராமில் ஃபலோவ் செய்வதை நிறுத்தி விட்டனர்.
Read More :- இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட ஐபிஎல் அணி எது தெரியுமா ?
அந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே இந்த ஆண்டு வரை நீடித்தது. மேலும், ரோஹித் ஷர்மாவுடன் கருத்து வேறுபாடு உண்டு என்பதை ஹர்திக் பாண்டியா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல கிரிக்கெட் பிரபலங்கள் இதை பற்றி கலவையாக பேசி கொண்டும் இருந்தனர். இதன் விளைவால் மார்ச் 18-ம் தேதி நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மும்பை அணி கேப்டனான பாண்டியாவும், தலைமை பயிற்சியாளரான மார்க் பவுச்சரும் பத்திரிகையாளர்கள் ரோஹித் சர்மா பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருந்தனர்.
இதனால், X தளத்தில் RIPHARDIKPANDIYA என ஹாஸ்டாக்கை உருவாக்கி மும்பை அணி ரசிகர்கள் பாண்டியவை திட்டி வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது. இந்த பயிற்சி முகாமில் ரோகித் சர்மா நேற்றுதான் வந்து இணைந்துள்ளார். ஆனால், அப்போது கூட அவர் பாண்டியாவை சந்திக்காமல் சென்று விட்டார் என்று தகவல்கள் வெளியானது. அதை தொடர்ந்து அனைத்து வீரர்களும் பங்கு பெறும் பயிற்சி முகாம் மும்பையில் நேற்று நடைபெற்றது.
Read More :- இந்த ஐபிஎல் 2024 தொடருக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பார்ப்புகள் தெரியுமா ?
அப்போது, அந்த இடத்தில் ரோகித் சர்மாவை பார்த்த ஹர்திக் பாண்டியா நேரடியாக அவரிடம் சென்று அவரை கட்டி அணைத்தார். இதற்கு ரோஹித் ஷர்மாவும் அவரை கட்டி அணைத்தார். இதை கண்ட மற்ற வீரர்கள் எல்லாரும் கை தட்டி வரவேற்றனர். இந்த வீடீயோவை நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி X தளத்தில் வெளியிட்டது. இதனால் மும்பை அணியில் நிலவி வந்த பிரச்சனை இந்த நிகழ்வின் மூலம் முடிவுக்கு வந்திருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
???????? ???? ????????#OneFamily #MumbaiIndians | @hardikpandya7 @ImRo45 pic.twitter.com/eyKSq7WwCV
— Mumbai Indians (@mipaltan) March 20, 2024