தள்ளி போகிறதா அந்த ஐபிஎல் போட்டி ..? என்ன காரணம் தெரியுமா ?

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் ஏப்ரல்-17 ம் தேதி நடைபெறும் 32-வது போட்டியான கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதும் போட்டி தற்போது தள்ளி போக உள்ளதாக தகவல்கள் வருகிறது.

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் -22 ம் தேதி தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெறுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரின் 32-வது போட்டியாக நடைபெற உள்ள போட்டி தான் கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதவுள்ள போட்டியாகும். இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக நடைபெறுகிறது.

இந்த போட்டியானது தற்போது குறிப்பிட்ட தேதியான ஏப்ரல்-17 ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது. தற்போது, அந்த போட்டியானது ஒத்தி வைக்க போவதாக சில தகவல்கள் வெளியாகிறது. வருகிற ஏப்ரல் – 17ம் தேதி அன்று ‘ராமநவமி’ (ராமரின் பிறந்த நாள்) என்னும் திருவிழா வருவதால் நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்கள் அதனை கொண்டாடுவார்கள்.

மேலும், குறிப்பாக கொல்கத்தாவில் உள்ள மக்கள் அன்று இரவு அதனை சிறப்பாக கொண்டாடுவார்கள் என்ற காரணத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு கொல்கத்தா போலீசார் பிசிசிஐயிடம் அன்று நடைபெறும் போட்டியை ஒத்திவைக்கமாறு சில பேச்சு வார்த்தைகளில் ஈடுப்பட்டு வருவதாக சில தகவல்கள் கசிந்து உள்ளது.

இதனை கருத்தில் கொண்டும் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறும் காரணத்தாலும் தற்போது பிசிசிஐ ஏப்ரல்-17 ம் தேதி நடைபெறும் போட்டியை ஒத்திவைக்கலாமா என்று பேச்சு வார்த்தையில் ஈடு பட்டு வருவதாகவும் சில ஊடகங்களின் மூலம் தகவல்கள் தெரிகிறது. இதனால், அன்று நடைபெறும் போட்டியை மாற்றி வேறொரு நாள் நடத்தலாம் என்று தெரிகிறது, எதுவாக இருந்தாலும் கூடிய விரைவில் பிசிசிஐ இதற்கான அதிகார பூர்வ முடிவை எடுத்தால் மட்டுமே என்னவென்று தெரியவரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்