பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் இவரா? அப்போ இந்த முறை கப்பு கன்ஃபார்ம் தான் போல ..!
பஞ்சாப் கிங்ஸ் : அடுத்த வருடம் இந்த ஆண்டு அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏளமானது இந்த வருட இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூலை 30 மற்றும் 31 தேதிகளில் நடைபெற இருக்கிறது.
மேலும், ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்களது அணிகளுக்குள்ளே வீரர்கள், பயிற்சியாளர்கள் என பல மாற்றங்களை செய்து வருகிறது. சமீபத்தில் கூட நட்சத்திர அணியான மும்பை அணியின் சீனியர் வீரர்களாக இருக்கும் ரோஹித் சர்மா மட்டும் சூரியகுமார் யாதவ் மும்பை அணியை விட்டு வெளியேற இருப்பதாக சில தகவல்கள் வெளியானது.
அதே போல டெல்லி அணியின் கேப்டனாக விளையாடும் ரிஷப் மட்டும் டெல்லியில் இருந்து விலகி சென்னை அணியில் இடம்பெற உள்ளதாகவும் தகவல் வெளியானது. அந்த பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் தற்போது இணைந்துள்ளது. ஆனால், வீரர்களை பற்றிய தகவலைகள் இல்லை அதற்கு மாறாக பயிற்சியாளர்களை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
அது என்னவென்றால், அனில் கும்ப்ளேவுக்கு பின் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் பயிற்சியாளர் பேலிஸ் நியமனம் செய்யப்பட்டார். இவரின் பயிற்சியிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் திணறி வருகிறது. இந்நிலையில், அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டுடன்
முடிவடைந்தது.
இதனால், அவரது இடத்திற்கு தற்போது பஞ்சாப் அணி நிர்வாகம் இந்திய பயிற்சியாளர் ஒருவரை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அந்த வகையில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரரான வாசிம் ஜாபரை நியமிக்க அந்த அணியின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் இதற்கு முன்னரே பஞ்சாப் அணிக்காக 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பஞ்சாப் அணிக்காக பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.