சம்பளத்தை விட அதிகமாக அபராதம் கட்டுகிறாரா திக்வேஷ் ரதி? உண்மை என்ன?
ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் திக்வேஷ் ரதி 30 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதில் 50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக அபராத தொகையை செலுத்தி வருவதாக வெளியான தகவல் தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு டெல்லி பிரீமியர் லீக் (DPL) தொடரில் சிறப்பாக விளையாடி பலருடைய கவனத்தை ஈர்த்த திக்வேஷ் ரதி இந்த முறை நடந்து ஐபிஎல் ஏலத்தில் லக்னோ அணியால் 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
சமீபத்தில், ஐபிஎல் 2025 தொடரில் திக்வேஷ் ரதி பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விக்கெட் எடுத்த பிறகு தனது “நோட்புக்” (notebook) என்ற பிரபலமான கொண்டாட்டத்தை மீண்டும் மீண்டும் செய்தார். இது ஐபிஎல் நடத்தை விதிகளை (Code of Conduct) மீறுவதாக கருதப்பட்டது.
எனவே, விதிமுறைகளை மீறினால் உடனடியாக அபராதம் விதிக்கப்படுவதும் வழக்கமானது. முதல் முறையாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக பிரியான்ஷ் ஆர்யாவை ஆட்டமிழக்கச் செய்த பிறகு இந்த கொண்டாட்டத்தை செய்ததற்காக, அவருக்கு மேட்ச் ஃபீயில் 25% அபராதமாக விதிக்கப்பட்டது, இதற்கு மேலாக ஒரு டிமெரிட் பாயிண்ட் (demerit point) வழங்கப்பட்டது. இரண்டாவது முறையாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நமன் தீரை ஆட்டமிழக்கச் செய்த பிறகு அதே கொண்டாட்டத்தை மீண்டும் செய்தார்.
இதனால், ஐபிஎல் விதிகளின்படி, அவருக்கு மேட்ச் ஃபீயில் 50% அபராதம் விதிக்கப்பட்டது, அதாவது சுமார் 3.75 லட்சம் ரூபாய். மேலும், இரண்டு டிமெரிட் பாயிண்ட்கள் சேர்க்கப்பட்டன. ஆனால், சில சமூக ஊடக தளங்களில் (எக்ஸ் போன்றவை) அவர் 50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தவறான தகவல்கள் பரவின.
ஐபிஎல் அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, திக்வேஷ் ரதியின் அபராதத் தொகை 50 லட்சம் ரூபாய் அல்ல. முதல் முறை 25% மேட்ச் ஃபீ (சுமார் 1.875 லட்சம்) மற்றும் இரண்டாவது முறை 50% மேட்ச் ஃபீ (சுமார் 3.75 லட்சம்) என மொத்தம் 5.625 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனைகவனிக்காமல் தொடர்ச்சியாக அவர் தன்னுடைய கொண்டாட்டத்தில் கவனத்தை செலுத்திக்கொண்டு இருந்தால் நிச்சயமாக