தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தபோது, அணி 15 வது ஓவரில் 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில், மைதானத்தில் ரசிகர்களின் பயங்கர உற்சாகத்திற்கு மத்தியில் எம்எஸ் தோனி களமிறங்கினார்.
அவர் களமிறங்கியவுடன் கொல்கத்தா அணி 15-வது ஓவரில் நரனை கொண்டு வந்தது. அந்த ஓவரின் 3-வது பந்தில் தோனியின் பேட்டைத் தாண்டி அவரது பேடில் பட்டது. ஆன்-ஃபீல்டு அம்பயர் சிபி கஃபானி, இதை எல்பிடபிள்யூ எனக் கருதி தோனியை அவுட் கொடுத்தார். ஆனால், தோனி இந்த முடிவை ஏற்கவில்லை மற்றும் உடனடியாக ரிவியூவ் (DRS – Decision Review System) கோரினார்.
அப்போது, அல்ட்ரா-எட்ஜ் தொழில்நுட்பத்தில் ஒரு சிறிய ஸ்பைக் தெரிந்தது. இது பந்து பேட்டைத் தொட்டிருக்கலாம் என்பதற்கு ஒரு அறிகுறியாகக் பார்க்கப்பட்டது. இருப்பினும், மூன்றாவது அம்பயர், இந்த ஸ்பைக்கை முடிவை மாற்றுவதற்கு போதுமான ஆதாரமாகக் இல்லை என்பது போல ஆன்-ஃபீல்டு அம்பயரின் முடிவு உறுதி செய்யப்பட்டு, தோனி அவுட் என அறிவிக்கப்பட்டார். இதனால் தோனி வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இருப்பினும் இந்த முடிவு பல கேள்விகளை எழுப்பியது, குறிப்பாக அல்ட்ரா-எட்ஜில் ஸ்பைக் தெரிந்தும் தோனி ஏன் அவுட் கொடுக்கப்பட்டார் என்பது புரியாத புதிராக இருக்கிறது என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி கொண்டு வருகிறார்கள்.