ஹெட் மாதிரி கோலி விளையாடினாள் போதும் உடனே மக்கள் விமர்சிப்பாங்க! இர்பான் பதான் காட்டம்!

irfan pathan Virat Kohli Travis Head

Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த  ஹைதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. அந்த சமயத்தில்  தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட்  பொறுமையாக களத்தில் நின்று 44 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார்.

அதிகமான பந்துகளில் டிராவிஸ் ஹெட் 58 ரன்கள் அடித்தது விமர்சனங்கள் ஆகவில்லை. ஆனால், இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி  43 பந்துகளில் 51 ரன்கள் அடித்து இருந்தார். இதனால் விராட் கோலி ரொம்பவே மெதுவாக விளையாடி 50 ரன்கள் அடிப்பதற்காக விளையாடுகிறார் என்பது போல விமர்சனங்கள் எழுந்தது.

ஆனால்,  டிராவிஸ் ஹெட் 44 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தது பெரிய அளவில் விமர்சனம் ஆகவில்லை. இதுவே இந்த போட்டியில் ஒருவேளை விராட் கோலி விளையாடி இவரை போலவே ரன்கள் அடித்து இருந்தால் மக்கள் கண்டிப்பாக விராட் கோலியை விமர்சித்து இருப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய இர்பான் பதான் ” மக்கள் வீரர்களை ஒரே மாதிரி பார்க்கவேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டிராவிஸ் ஹெட் 44 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். அணியில் தொடர்ச்சியாக விக்கெட் விழுந்த காரணத்தால் அவர் அப்படி விளையாடினார். என்னை பொறுத்தவரையில் அவர் ஆடிய இந்த விதம் ரொம்பவே சரியானது என்று தான் நான் சொல்வேன்.

ஆனால், இதைப்போன்று விராட் கோலி விளையாடினாள் மட்டும் எதற்காக அவருடைய ஸ்ட்ரைக் ரேட்டை வைத்து விமர்சிக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இதைப்போலவே விராட் கோலி விளையாடி இருந்தார். அதுவும் விமர்சனத்துக்கு உள்ளானது. அவரை போலவே, டிராவிஸ் ஹெட் விளையாடி இருக்கிறார். ஆனால், மக்கள் இந்த ஆட்டத்தை புரிந்துகொண்டார்கள்.

அடுத்ததாக விராட் கோலி இப்படி ஒரு ஆட்டம் ஆடினால் திரும்பவும் விமர்சிப்பார்கள். இது என்னை பொறுத்தவரை ரொம்பவே தவறான விஷயம் என்று நான் நினைக்கிறன். வீரர்கள் எல்லாம் அணியில் இருக்கும் பொறுப்புகளை உணர்ந்து தான் விளையாடி வருகிறார்கள். எனவே, இதனை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரையும் சமமாக நடத்த வேண்டும்” எனவும் இர்பான் பதான் சற்று காட்டத்துடன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்