ரஞ்சியில் விளையாட என்ன பிரச்சனை? இஷான் கிஷன் மீது கடுப்பான பதான்.!
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நடைபெற இருக்கும் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் மற்றும் துருவ் ஜுரெல் இருவர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் இளம் வீரரான இஷான் கிஷன் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இஷான் கிஷன் தென்னாப்பிரிக்கவுடனான டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே மனசோர்வு காரணமாக இஷான் கிஷன் நாடு திரும்பி இருந்தார்.
#U19WorldCupFinal: இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்
இந்நிலையில், ரஞ்சி டிராபி போட்டிகளிலும் இஷான் கிஷன் விளையாடமல் இருக்கிறார். தற்போது 2வது டெஸ்ட் போட்டிக்கு நிறைவடைந்த பிறகு இஷான் கிஷன் குறித்து தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பேசுகையில், ” நமது பிசிசிஐ, இஷான் கிஷனுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. பிசிசிஐ அவரிடமும் மறைமுகமாக, இந்திய அணிக்கு திரும்ப வருவதற்குள் சில போட்டிகளில் அவர் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
இந்நிலையில், பாண்டியா சகோதரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இஷான் கிஷன், ரஞ்சி போட்டிகளில் விளையாடாமல் இருப்பது ஏன் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் தனது X தளத்தில் கூறுகையில், ” கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுவதற்கான உடல்தகுதியுடன் இருக்கும் ஒரு வீரர், ரஞ்சி போட்டிகளில் விளையாட முடியாமல் இருப்பது ஏன்.. இது குழப்பத்தை தருகிற அளவுக்கு இருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்? எப்படி புரிந்து கொள்வது? ” என்று காட்டமாக பதிவிட்டிருந்தார்.
டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் சூழலில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா டி20 தொடர்களில் ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்ததால் தான் இஷான் கிஷன் கோபமடைய காரணம் என்று கூறப்படுகிறது. அதே நேரம் ஒரு வருடங்களுக்கு பிறகு ரோகித் சர்மா திடீரென மீண்டும் டி20 கிரிக்கெட் விளையாடினார் அதன் காரணமாக கூட இவருக்கு வாய்ய்பு கிடைக்காமல் போனது.
இதுவும், இஷான் கிஷனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் விவகாரத்தில் ஹர்திக் பாண்டிய, ரோகித் சர்மா இருவருக்கும் சர்ச்சைகள் இருக்கும் நிலையில், இஷான் கிஷன் மற்றும் பாண்டியா சகோதரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருவது பல்வேறு சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.