பும்ரா ஒரு பேபி பவுலர் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் -ரவுண்டர் அப்துல் ரசாக் கூறினார்.மேலும் நான் விளையாடிய காலகட்டத்தில் பலவிதமான ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் பும்ராவின் பந்துவீச்சை மிகவும் எளிமையாக எதிர்கொள்வேன் என்று கருத்து கூறினார்.இவர் இவ்வாறு கூறியது இந்திய ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனால் இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அப்துலை கடுமையாக விமர்சித்தனர்.
மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து அவர் கூறுகையில், விராட் கோலி மட்டும் சச்சினை போல நல்ல மதிப்பெண்களை பெற்றுவருகிறார்.ஆனால் விராட் கோலியை சச்சினுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் சச்சின் வேறு ,கோலி வேறு என்றும் தெரிவித்தார்.இந்த கருத்து மேலும் இந்திய ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் பும்ராவை குறிவைத்து கூறியதற்கு இந்திய அணியின் ஆல் -ரவுண்டராக ஜொலித்த இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இந்திய ரசிகர்களே இம்மாதிரியான கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் .இந்த கருத்தை ஒதுக்குங்கள் . இவற்றை எல்லாம் படித்து விட்டு சிரித்து விடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…